சனி, 8 நவம்பர், 2008

நட்பை தவிர வேறோன்றிமில்லை !






இது ஒரு அழகிய உலகம் ..


இங்குள்ள மலர்கள் அனைத்தும்


புன்னகை பூக்கும் ...


மனம் என்னும் பட்டாம் பூச்சிகள்


ஆனந்ததில் படபடக்கும் ..


பச்சை புல்வெளிகள் அனைத்தும்


பசுமையான நினைவுகள்...


நட்பு என்ற தென்றலால் சிலு சிலுக்கும் ...


ஆம் இது


"நட்பினால் இணைந்த ஓரு அழகிய உலகம் "..
என்றும் நட்புடன்
***விஜய்***

***சொர்க்கம்***






சொர்க்கம் என்பது எங்கே

உள்ளதுசொலவா முடியாது

நற்கருணையுடன் மானுடம் நடந்தால்

நமைவிட மேல் ஏது
மண்ணில் தெரியுது சொர்க்கம் காண வாங்க

கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்

கதைகள் ஏன் போங்க
பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்

பாசம் பொழியுங்க

புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க

போரை அழியுங்க
எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை

என்றால் ஏன் சண்டை

வல்லான் இல்லான் என்றில்லாமல்

வசிப்போம் ஊராண்டை
காலையிற் பகைவனைத் தியானம் செய்க

காதலில் ஆழ்ந்திடுக

மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்

மனம்போல் வாழ்ந்திடுக
உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க

உடனே சிரியுங்க

விர்என வெளியே வாங்க அங்கே

விண்ணைப் பிடியுங்க
சண்டை களுக்குள் நேரம் தொலையுது

சவத்தைத் தள்ளுங்க

அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க

அனுபவம் கொள்ளுங்க
மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை

மறுபடி ஏன் சண்டை

பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு

பழகுக வீட்டாண்டை
புத்தன் ஏசு போதித் தார்கள்

போற்றுக நற்றொண்டை

நித்தம் நித்தம் முழக்குக முழக்கி

நெகிழுக நம் தொண்டை
நாம் எல்லோரும் நபியின் பிள்ளை

நமக்குள் ஏன் சண்டை

பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன

போனது நாள் பண்டை
மானுட சக்தியின் மகத்துவம் கேட்க

மக்காள் வாருங்க

தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்

தேளிடம் ஏனுங்க
அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்

அன்பைத் தெளியுங்க

கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்

காதலைப் பிழியுங்க
குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்

குற்றம் உமதுங்க

வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த

வகையும் உமதுங்க
கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்

கதவைத் திறவுங்க

நவநவமான உலகம் உமக்கே

நட்பாய்ப் பரவுங்க
மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை

மனம் போல் சுத்துங்க

கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்

கவலைகள்

மல்லிகைப் பூக்கள்!



அமரப்பட்ட இடத்தில் பல நினைவுகள்

அமர கண்கள் குளித்தது; தேகமும் கூட.

என்னுள் இருந்து பயிர் செய்தவன், தப்பிவிட்டான்.

இனியென் கண்களுக்கு முத்தமில்லை;

வெறும் கனவுகள் வருமோ? என் கரங்களின் கணையாழிகள்

ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது?

இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல.. ..

ஊற்றிய தண்ணீரில் என் கோலம் அலங்கோலம்.

புள்ளி வைத்த பொடிகள் கரைந்து போன கோலம்.

கழுத்தோடு அணைக்கப்பட்டிருந்த

என்னுயிர் கொலை செய்யப்பட்டது.

கவனித்துக் கொண்டிருந்த

மரண ஜீவன் கண்ணீர் விட்டது.

திருப்தியாக சென்றுவிட்டார்கள்,

புண்ணிய வதிகள்.

திருப்தியற்று கிடக்கிறேன்,

புண்பட்ட விதிகள்.

நாளைய காலை,

வாசலில் கூவிக் கொண்டிருக்கும் பூக்காரியிடம்

வாங்கி சொறுகிக் கொண்டேன் இருமுழ மல்லிகைப் பூக்கள்!

இருப்பதில் திருப்தி அடை! (குட்டி கதை )



குருவிடம் வந்தான் ஒருவன். ‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’ ‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’ ‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

வெள்ளி, 7 நவம்பர், 2008

***மனித நேயம் ...!***


நான் ஒரு புலி
நான் சதாரண ஆட்டு மந்தைகளோடு
பேசவும் பழகவும் போவதில்லை .அழுபவர்களிடமும்
குறை கூறுபவர்களிடமும் நான் சேரப்போவதில்லை .
என்னுடைய தொலை தூரப்பயணம் தோல்வி என்ற
பலி பீடத்தில் முடியபோவதில்லை .
வெற்றியின் வெகுமதி பயணத்தின் முடிவில் தானே
தவிரதொடக்கத்தில் இல்லை .
பயணத்தில் பாலைவனம் எங்கு முடிகிறது ?
பசுஞ்சோலை எங்கு தொடங்குகிறது _யாருக்கு தெரியும் ?
இந்த மூச்சிலேயே என்னுடைய முழு உழைப்பையும் தருகிறேன் .
அடுத்த மூச்சைப்பற்றிய கவலை இல்லை
நூறாண்டுகளுக்கு வாழ்வோம் என திட்டமிடுகிறேன்.
ஆனால் நாளை இறந்துவிடுவோம்
என்று செயலாற்றுகிறேன் .
அதிர்ஷ்டத்தில் அவ நம்பிக்கையில்லை .
ஆனால் முயற்சியில் மட்டும் முழு நம்பிக்கை உண்டு
என்னுடைய வாதங்கள் மறுக்கப்படலாம்.
நான் நிராகரிக்கப்படலாம். பேச்சு அவ நம்பிக்கை தரலாம்
ஆனால் ஒப்பனைஇல்லாத இதயத்தை கரைக்கும்
அன்பில் சந்தேகத்திற்கு இடமிருக்க முடியாது
ஒளி தரும் சூரியனிடம் உள்ளார்ந்த
அன்புண்டு ஒளியின் வழியும் அதுதானே !
இருளையும் நான் தவறாமல் நேசிக்கிறேன் .
கண் சிமிட்டும் நட்சத்திரங்களை அப்போது தானே
காணமுடிகிறது..! சோகமும் ஒரு வகை சுவை தான்
அது தானே ஆன்மாவின்மொழி ...!
எதார்த்தவாதிகள் எனக்கு நண்பர்கள்
இறைவனுக்கும் இவர்களுக்கும் இடைவெளிஇல்லை.
வயதை வணங்குகிறேன் .அன்பிற்கு வயதில்லை
ஞானம் அங்குதான் பழுக்கிறது .அன்பில் எந்த குற்றமும்
அடிபட்டுபோகிறது வார்த்தைகளின்
கனிவு நம்பிக்கைக்கொடுக்கிறது
அன்பு நம்மிடமுள்ள பெரிய ஆயுதம் .
அள்ள அள்ள அதிகமாவது .
கொடுக்க கொடுக்க குறையாதது .
நான் அறிவுரை வழங்கும் அறிஞன் அல்ல !
போதிக்கும் புத்தன் அல்ல !
சோதிக்கும் கடவுள் அல்ல !
சிந்திக்கும் சிந்தனைவாதி அல்ல !
எல்லாம் தெரிந்த மேதை அல்ல !
கற்பனையுள்ள கவிஞனும் அல்ல !
காவியம் படைக்கும் படைப்பாளி அல்ல !
ஆணை இடும் தலைவன் அல்ல !
தொண்டு செய்யும் தொண்டன் அல்ல !
***அன்புள்ளம் கொண்ட மனிதன்***
மனிதனை மனிதாய் நேசிப்போம்
***விஜய் ***

வெள்ளி, 31 அக்டோபர், 2008

கிறுக்கல்கள்

பேனா சிரிக்குமோ?மூன்றாம் வகுப்பில்முதன் முதலாகபேனா பிடித்தேன்.பிஞ்சு விரலால் எழுதிய முதல்பேனா இன்றும் பொக்கிஷமாய்.இன்றும் ஒவ்வொரு முறை திறக்கும் போதும், மை இல்லாமல் தவித்த நான்காம் வகுப்புஅரையாண்டுத் தேர்வில்ஏற்பட்ட பயம் லேசாய் இதழோரம் சிரிப்பு மூட்டிச் செல்லும். புதுசாய் எத்தனை பேனா வந்தாலும் ஏப்ரல் ஒண்ணாந் தேதி மை தெளிக்கஉபயோகிப்பதற்காகவே முதல் பேனா பாதுகாக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பரீட்சையில்மை தீர்ந்து போனால் ஊற்றிக் கொள்ள மை குடித்து குட்டி மை புட்டியாககூட வந்தது. கட்டுக் கட்டாய் காகிதம் தின்னக்கொடுத்து சொட்டுச் சொட்டாய் மை வண்ணங்கள் ஊற்றி எழுதியஎன் பேனா ஒரு நாளும் என் எண்ணங்களை ஊற்றி எழுதாததைஎண்ணி ஏளனமாய் சிரிக்குமோ?