
நான் ஒரு புலி
நான் சதாரண ஆட்டு மந்தைகளோடு
பேசவும் பழகவும் போவதில்லை .அழுபவர்களிடமும்
குறை கூறுபவர்களிடமும் நான் சேரப்போவதில்லை .
என்னுடைய தொலை தூரப்பயணம் தோல்வி என்ற
பலி பீடத்தில் முடியபோவதில்லை .
வெற்றியின் வெகுமதி பயணத்தின் முடிவில் தானே
தவிரதொடக்கத்தில் இல்லை .
பயணத்தில் பாலைவனம் எங்கு முடிகிறது ?
பசுஞ்சோலை எங்கு தொடங்குகிறது _யாருக்கு தெரியும் ?
இந்த மூச்சிலேயே என்னுடைய முழு உழைப்பையும் தருகிறேன் .
அடுத்த மூச்சைப்பற்றிய கவலை இல்லை
நூறாண்டுகளுக்கு வாழ்வோம் என திட்டமிடுகிறேன்.
ஆனால் நாளை இறந்துவிடுவோம்
என்று செயலாற்றுகிறேன் .
அதிர்ஷ்டத்தில் அவ நம்பிக்கையில்லை .
ஆனால் முயற்சியில் மட்டும் முழு நம்பிக்கை உண்டு
என்னுடைய வாதங்கள் மறுக்கப்படலாம்.
நான் நிராகரிக்கப்படலாம். பேச்சு அவ நம்பிக்கை தரலாம்
ஆனால் ஒப்பனைஇல்லாத இதயத்தை கரைக்கும்
அன்பில் சந்தேகத்திற்கு இடமிருக்க முடியாது
ஒளி தரும் சூரியனிடம் உள்ளார்ந்த
அன்புண்டு ஒளியின் வழியும் அதுதானே !
இருளையும் நான் தவறாமல் நேசிக்கிறேன் .
கண் சிமிட்டும் நட்சத்திரங்களை அப்போது தானே
காணமுடிகிறது..! சோகமும் ஒரு வகை சுவை தான்
அது தானே ஆன்மாவின்மொழி ...!
எதார்த்தவாதிகள் எனக்கு நண்பர்கள்
இறைவனுக்கும் இவர்களுக்கும் இடைவெளிஇல்லை.
வயதை வணங்குகிறேன் .அன்பிற்கு வயதில்லை
ஞானம் அங்குதான் பழுக்கிறது .அன்பில் எந்த குற்றமும்
அடிபட்டுபோகிறது வார்த்தைகளின்
கனிவு நம்பிக்கைக்கொடுக்கிறது
அன்பு நம்மிடமுள்ள பெரிய ஆயுதம் .
அள்ள அள்ள அதிகமாவது .
கொடுக்க கொடுக்க குறையாதது .
நான் அறிவுரை வழங்கும் அறிஞன் அல்ல !
போதிக்கும் புத்தன் அல்ல !
சோதிக்கும் கடவுள் அல்ல !
சிந்திக்கும் சிந்தனைவாதி அல்ல !
எல்லாம் தெரிந்த மேதை அல்ல !
கற்பனையுள்ள கவிஞனும் அல்ல !
காவியம் படைக்கும் படைப்பாளி அல்ல !
ஆணை இடும் தலைவன் அல்ல !
தொண்டு செய்யும் தொண்டன் அல்ல !
***அன்புள்ளம் கொண்ட மனிதன்***
மனிதனை மனிதாய் நேசிப்போம்
***விஜய் ***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக